BREAKING NEWS

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர். கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மண் தரையில் வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி வெங்கடேசன்!

 

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனிகள் இயங்கி வருகிறது.

இந்தப் பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியில் இயங்கி வரும் ஒரு சில வஜ்ஜிரம் கம்பெனிகள் சுத்திகரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவுநீரை மண் தரையில் வெளியேற்றுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு முக்தியார் என்பவருக்குச் சொந்தமான வஜ்ஜிரம் கம்பெனியிலிருந்து.

சுத்தகரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவு நீரை பைப் லைன் மூலமாக மண் தரையில் வெளியேற்றிக் கொண்டிருந்தனர் .இப்படியாக வஜ்ஜிரம் கம்பெனிகள் சுத்தி கரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவு நீரை மண்தரையில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வஜ்ஜிரம் கம்பெனிகளால் வெளியேற்றப்படும் சுத்தகரிக்கப்படாத கழிவு நீரால் கொசுத் தொல்லைகள் அதிகமாகி இந்த பகுதியில் வாழும் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாகவும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் செடி, கொடிகள், பயிர்கள் வளராமல் ண்டமிகவும் பாதிப்பிற்கு விவசாயிகள் ஆளாகி உள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் காந்தி நகரில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசனுக்கு வாய்மொழியான புகார்களை அளித்தால் அதிகாரி வெங்கடேசன் தவறு செய்யும் ஒரு சில வஜ்ஜிரம் கம்பெனி முதலாளிகளிடம்‌ கப்பத்தை பெற்றுக்கொண்டு சென்று விடுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியான‌ வெங்கடேசன் தவறு செய்யும் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஹி.ஹி…என்று பல்லை இளித்துக் கொண்டு அவர்கள் கொடுக்கும் லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது.

எனவே இது குறித்து சென்னை கிண்டியில் உள்ள தலைமை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளான சேர்மனும் , எம்.எசும் இதில் தனிக்கவனம் செலுத்தி பேரணாம்பட்டுக்கு வருகை தந்து இதுபோல சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ஜிரம் கம்பெனிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகரில் வாழும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .

CATEGORIES
TAGS