BREAKING NEWS

போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,

போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,

தமிழ்நாட்டில் இயங்கி வரும் போக்குவரத்து கழக மண்டலங்களில் வேலூர் மண்டலத்தில் 40 நாற்பத்துக்கும் மேற்பட்டடிக்கெட்பரிசோதனை ஆய்வாளர்கள் (ci) பணிபுரிந்து வருகிறார்கள், இவர்களில் 7 ஏழு பேர் பஸ் நிலையங்களில் வெய்யில்என்று பாராமல் சுகாதாரமற்ற சுவாச காற்றை சுவாசித்துக் கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் பரிசோதனையில் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

 

அலுவலகங்களில் இருக்கைகளில் அமர்ந்து காற்றோட்ட வசதியுடன் பணியாற்றும் அலுவலர்களின் வேலை நேரம் 8 மணி நேரம், ஏன் இந்த ஓரவஞ்சனை என்று சமூக ஆர்வலர்கள்கேள்வி எழுப்புகின்றனர், மற்ற மண்டலங்களில் இது போன்ற நடைமுறை கிடையாது.

இந்த 12 மணி நேர பணி சுமையால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர், பணி சுமைக்கு காரணம் ஆட்கள் பற்றாக்குறை என்று அலுவலகத்தரப்பில் கூறப்படுகிறது, எனவே வேலூர் போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் ஆட்கள் பற்றாக்குறையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான பரிசோதனை ஆய்வாளர்களை நியமித்து மறைமுகமாக 12 மணி நேரம் பணி சுமையை தவிர்க்க வேண்டும்.

 

தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டு மற்ற மண்டலங்களில் பணியாற்றும் பரிசோதனை ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பணி நேரம் 8 மணி நேரம் என்பதைப் போல் வேலூர் மண்டலத்தில் பணியாற்றும் பரிசோதனை ஆய்வாளர்கள்(ci) பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதும் மறைமுகமாண 12 மணி நேர பணி சுமையை தவிர்க்க வேண்டும் என்பன சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS