BREAKING NEWS

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்.

 

 

பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் திரு அண்டோ ஆரோக்கிய ஜோதி அவர்கள் வரவேற்புரை உரையாற்றினார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர காவல் உதவி ஆணையாளர் திரு விஜயகுமார் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் மற்றும் அவற்றில் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

 

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேட்டை சரக காவல் நிலைய ஆய்வாளர் அன்னலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

 

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியே முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )