BREAKING NEWS

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

 

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

 

 

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி வெகு சிறப்பாக சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.

 

பொதுமக்கள் அனைவரும் அன்றாடம் சமத்துவத்தை பின்பற்ற வேண்டும். அனைத்து மதத்தினரும் ஒன்றாக விளங்குவதர்க்கு காரணம் சமத்துவமாகும்.

 

 

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி ஏற்ற உடன் அனைத்து சமத்துவபுரங்களையும் சீரமைக்கவும், பழுது பார்க்கவும் உத்தரவிட்டார்கள்.

 

அதன்படி காட்டுச்சேரி சமத்துவபுரத்திற்கு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார்கள். தற்போது 95 வீடுகள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

வீடுகள் தரமாக கட்டிகொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடுகளை நன்றாக பராமரிக்க வேண்டும். பெண்களால் முடியாதது எதுவும் கிடையாது.

 

 

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் கொள்கையால்தான் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மகளிர் சுயஉதவி குழுவினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிக நிதி ஒதுக்கீடு செய்துளார்கள். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

 

சமத்துவ பொங்கல் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் அருள்ஜோதிஅரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மகளிர் திட்ட அலுவலர் பழனி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) மஞ்சுளா,

 

 

செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் அப்துல் மாலிக், தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, விஜயலட்சுமி, தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா,

 

காட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் பா.விஜயலட்சுமி, காட்டுச்சேரி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் எஸ்.சந்தானகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

CATEGORIES
TAGS