மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.
![மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் காட்டுச்சேரி ஊராட்சியில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைத்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-23-at-7.55.18-PM.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா கலந்து கொண்டு சிறுவர் சிறுமியர் மன்றத்தை திறந்து வைத்தார்.
இதில் சிறுவர் சிறுமியர் உடற்பயிற்சி பெறுவதற்கும் விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து காவல்துறைக்கு சொந்தமான காவல் துறையினர் பயிற்சி பெறும் பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் லாமேக், ராஜ்குமார், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி சாமிநாதன், ரெங்கராஜ், ராஜா, சம்சாத் ரபீக், திமுக ஊராட்சி செயலாளர் சாரா சேகர் மற்றும் காவல் துறையினர், ஊராட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.