மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “புதுமை பெண் திட்டம்” தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது.

தேனி மாவட்டம் சமுகநலன் மற்றும் மகளீர் உரிமைத் துறை சார்பில் அரம்பக் கல்வியை அரசு பள்ளியில் தொடங்கி தற்போது உயர் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “புதுமை பெண் திட்டம்”
(மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் ) துவக்க விழாவானது. தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5.09.2022 அன்று காலை நடை பெற்றது.

இவ்விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் S.சரவணகுமார், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன். ஆகியோரும் இந்தியாவிலேயே முதன்முதலாக ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற மாவட்ட நிர்வாகத்தை கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர் K.V. முரளிதரன் IAS அவர்களும்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையின் தலைவர் திருமிகு ராஜ்மோகன் அவர்களும் கலந்து கொண்டதோடு மாவட்ட சமுகநலத்துறை அலுவலர்களும் .N.S கல்லூரியின் மாணவ மாணவிகளும் , முதல்வர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆசிரியர் தின வாழ்த்துக்களோடு துவக்க விழா நடைபெற்றது.
