BREAKING NEWS

மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.

மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி

 

 

தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி1முதல் 5ஆம்வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை 15/09/2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் பணி தொடக்க விழா திண்டுக்கல் சௌராஷ்டிரா புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி ) தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் மேலும் குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 

இன்றைய குழந்தைகள் தான் நாளை எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து அவர்களுக்கு கல்வி அளிக்கவும், அவர்கள் பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள்.

 

இதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்த முதல்வர் அவர்களின் வயிற்றுப் பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார் அந்த வகையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

 

மேலும் அரசியல், பொருளாதாரம் ,கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவைதான் திராவிடம் மாடல் ஆட்சி என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரகடனப்படுத்தி இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கும்.

 

மேலும் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார் அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம் எனக்கூறி தெரிவித்தார்.

 

 

இந்நிகழ்ச்சியில் உடன் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் பா. வேலுச்சாமி, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா,

 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சசிகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், முக்கிய பிரமுகர் நெடுஞ்செழியன்,

 

மாநகராட்சி மண்டல குழு தலைவர் பிலால் உசேன் மற்றும் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )