BREAKING NEWS

மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

மானாமதுரை 19,வது வார்டில் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டில் நகராட்சி ஆணையர் சக்திவேல் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் 19, வது வார்டு கவுன்சிலர் லட்சுமி சங்கிலி அவர்களும் 19,வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

உடைந்த கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அவசர காலகட்டத்தில் வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள் மற்றும் சுடுகாட்டில் ஆய்வு மேற்கண்டு அங்கு சேதம் அடைந்துள்ள வாட்டர் டேங்க் தெருக்களில் எரியாத தெருவிளக்கு மற்றும் அனைத்து வகையான பிரச்சனைகளையும் உடனடியாக சரி செய்யப்படும் என நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் கூறினார். மற்றும் சுடுகாட்டிற்கு முன்பு புறம் நீர் மாலை எடுப்பதற்கு தண்ணீர் தேவைப்படுவதால் அதற்காக பொதுமக்கள் சின்டெக்ஸ் அமைத்துதர வேண்டுமென கூறினர்.

 

 

பொதுமக்களிடம் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் உடனடியாக அதற்கான வேலையை செய்து முடிப்போம் என உறுதி கூறினார்.

 இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் 19 வது வார்டு பொதுமக்களும் சந்தோசத்தில் மகிழ்ந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )