BREAKING NEWS

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.

மாபெரும் இலவச மருத்துவ முகாம்: மாவட்ட கவுன்சிலர் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மாவட்ட கவுன்சிலர் நகர் சி.சக்திவினாயகம் தலைமையில் நடந்தது.

இம்முகாமில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் மருத்துவர்கள் கிருஷ்ணா, கோபிகா, அஜய் ஆனந்த், வெங்கடேஷ் கிருஷ்ணன் கிருஷ்ணா தேவ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மகளிர் நல மருத்துவம் பொது மருத்துவம்,

மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற 50 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், கோ.கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரி ரகுநாதன், ஆதியூர் தலைவர் தேவகி ராஜா, நகர் முன்னாள் தலைவர் பெரியசாமி, வழக்கறிஞர் தமிழ்மணி, திமுக கிளை கழக செயலாளர் முருகேசன், விஜயகுமார், தாவுத் கனி, மற்றும் கிராமத்தினர் பலர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS