BREAKING NEWS

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சிதயரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 23 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 10 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகை கோரி18 மனுக்களும், புகார் தொடர்பான 15 மனுக்கள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி18 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 15 மனுக்களும், மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் எனமாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )