மாவட்ட செய்திகள்
பெட்டிக் கடைகளில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெறுவதால் மதுக்கூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் புலவஞ்சி கிராமத்தை சேர்ந்த போஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து வீடியோ ஆதாரங்களுடன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் மதுக்கூர் பகுதியில் பெட்டிக் கடைகளில் மதுபான விற்பனை படு ஜோராக நடப்பதாகவும் 1 நம்பர் லாட்டரி சீட்டு மற்றும் அப்பகுதியில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்ந்து .
நடைபெறுவதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மதுக்கூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மதுக்கூர் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்