BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் செய்தி

நகராட்சி வாகன ஓட்டுனர் மதுபோதையில் லாரியை ஓட்டி நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியதில் வாகனத்தின் அருகே இருந்த நபருக்கு பலத்த காயம் காவல்துறையினர் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்திரா நகரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்திலிருந்து இறங்கியுள்ளார் இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனத்தை ஓட்டுநர் வேளாங்கண்ணி என்பவர் ஓட்டி வந்து சாலையோரத்தில் நின்றிருந்த கணேசன் மீது மோதியது இதில் கணேஷ் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது இப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக கணேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நகராட்சி லாரி ஓட்டுநர் வேளாங்கண்ணியை பொதுமக்கள் சுற்றி வளைத்து இறக்கிய போது வேளாங்கண்ணி மதுபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து நகராட்சி ஊழியர் வேளாங்கண்ணி வாகனம் ஓட்டும் போது மது போதையில் இருப்பது தொடர்கதையாகி வருகிறது ஏற்கனவே இரண்டு பேரும் ஏற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தி உள்ளார் இவர் மீது நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது சாலையோரத்தில் இருந்த நபர் மீது வாகனத்தை மோதியதில் கணேசன் என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார் ஆகவே நகராட்சி நிர்வாகம் மதுபோதையில் பணி செய்யும் பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் மது போதையில் உள்ளார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவர் மட்டுமே விபத்தில் சிக்கியுள்ளார் மற்ற நாட்களாக இருந்தால் அரசு பள்ளிக்கு அதிக அளவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வருவது வழக்கம் மதுபோதையில் வந்த வாங்கினால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் ஆகவே 

கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் உடனடியாக தலையிட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )