மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் .
அவர்களுடைய 3வது ஆண்டு நினைவு நாளான இன்று ஆண்டிபட்டி அருகே வைகை அணை வளாகப் பகுதியில் ,40 ராணுவ வீரர்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இந்து முன்னணியினர் பூஜை செய்து வழிபட்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள் .
முன்னதாக வீர முழக்கமிட்டு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
CATEGORIES தேனி