BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஸ்ரீ எல்லம்மாள்,
ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது .

கிருஷ்ணகிரி அருகே பெரியஜெட்பள்ளம் கிராமத்தில் எழுந்தருளிவுள்ள ஸ்ரீ எல்லம்மாள் முனீஸ்வரர் கன்னியம்மாள் பச்சியம்மாள் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் மங்கல இசை வாஸ்து சாந்தி கணபதி ஹோமம் கொடி ஏற்றுதல் முதல் கால யாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை பூர்ணாஹிதி கோ பூஜை மகா மங்களார்த்தி பூஜைகள் யாகங்கள் மேற்கொள்ளப்பட்டு புனித கலச நீர் கொண்டு விமான கோபுர மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கண் திறப்பு விழா பம்பை வாத்தியம் முழங்க நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை வணங்கி அருள் பெற்றனர்.

இதில் பெண்கள் ஆண்கள் என பலர் அம்மன் அருள் எழுந்தருளி நடனமாடினர் இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )