மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு!

வேலூர் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மினி பேருந்துகள் இயக்க குலுக்கல் முறையில் தேர்வு!
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வேலூர் மாவட்டத்தில் 36 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஒன்றுக்கு
மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட வழித்தடங்களுக்கான விண்ணப்பத்தாரர்களை தேர்வு செய்ய, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி முன்னிலையில், குலுக்கல் முறை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் என பலர் உடனிருந்தனர்.
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்
CATEGORIES வேலூர்
TAGS சத்துவாச்சாரிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிமுக்கிய செய்திகள்வேலூர்வேலூர் சத்துவாச்சாரிவேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமிவேலூர் மாவட்டம்வேலூர் வட்டார போக்குவரத்து துறை