BREAKING NEWS

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.

மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.

வேலூர் மாவட்டம்,

வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது.

இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் பள்ளம் தோண்டி விட்டு  மின் கம்பத்தை நடாமல் கயிறு கட்டி நிறுத்திவிட்டு, அடுத்த இடத்தில் கால்வாய் கட்டி வருகின்றனர்.

 

 

கயிறு அறுந்தாலும், மின் கம்பம் சாய்ந்து விபரீதம் நடக்க வாய்ப்புண்டு,  மின் ஒயர் ஒயர் அருந்து விழுந்தாலும் சாலை வழியாக செல்வோருக்கு விபரீதம் நடக்க வாய்ப்புண்டு.

 

 

இப்போது மழை பெய்வதால் பேலன்ஸ் இல்லாமல் மின் கம்பம் சாயும் அபாயம் உள்ளது. அந்த சாலை உபயோகிப்போருக்கு உயிர் பயம் ஏற்படுத்கிறது.

 

 

மேலும் பொதுமக்களுக்கு அச்சத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் ? மின் கம்பம் இருக்கும் இடத்தில் கழிவு நீர் 5 மாதமாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது என்கின்றனர். கழிவு நீர் தேங்கி நிற்பதால் கிருமிகள் உற்பத்தி பாதிப்புகள் அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.

 

 

மேலும் 6 மாதகாலமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து கொண்டே இருப்பதால் அப்பகுதியில் சேரும் சகதியுமாக உள்ளதால், குறுகிய சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு, கழிவு நீர் கட்ட வெட்டபட்டிருக்கும் பள்ளத்தில் விழுந்துவிடும் அச்சத்தில் செல்கின்றனர்.

 

இதை கண்டு கொள்ள மருத்துவ துறை, பேரூராட்சி,  நெடுஞ்சாலை துறை யாரும் முன்வராத நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )