மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற25 ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுக்களை அளிக்க தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னணி தலைவர்கள் பலர் தங்கள் வாரிசுகளுக்குஇம்முறை பதவி வழங்க வேண்டும் என்று அறிவாலயத்தை சுற்றி சுற்றி வலம் வருகின்றனர்.இந்த முயற்சியில் பல முன்னணி கழக பதவியில் உள்ள தலைவர்கள் திரை மறைவில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களிடம் அறிவாலயம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தன் தலையை குனிந்தபடி அறிவாலயத்தை விட்டு வெளியேறுவதை காண முடிகிறது.ஏனெனில் வேலூர் மாவட்டம் மூன்றக பிரிப்பதற்கு முன்னே எதிர்க்கட்சி ஆளுகையில் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர் மாவட்ட செயலாளர் பதவியேற்று கட்சியின் கட்டளைகளை பட்டி தொட்டி எங்கும் கடைப்பிடித்து ஜாதி மதம் வேறுபாடு இன்றி மாவட்டம் முழுவதிலும்,

அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து வேலூர் மாவட்டம் திமுகவின்எ ஃகு கோட்டையாக மாற்றியதும். தற்போது மாவட்ட எல்லைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு தற்போது வேலூர் மத்திய மாவட்டம் செயலாளர் அண்ணா அறிவாலயத்தால் இளம் புயல் என்று அழைக்கப்படுபவருமான ஏபி நந்தகுமார்தான் என்றுமே எங்கள் மாவட்ட செயலாளர் இதை யாராலும் தடுக்க முடியாது பறிக்கவும் முடியாது என்ற குரல் கழகத்தினர் மாவட்டம் முழுவதும் கணீர் என ஒலிக்கிறது.
இவரையே மீண்டும் நியமித்தால் வேலூர் மத்திய மாவட்டம் என்றுமே கழக கோட்டையாக திகழும்என்பதில் ஐயமில்லை. இன்னும் பல கழக வரலாற்று சாதனைகள் படைப்பார்.

மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக திகழும் எனவே அறிவாலயம். திமுக தலைமை ஏபி நந்தகுமார் அவர்களை மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்கி மத்திய திமுக எஃகு கோட்டையாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கழக உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.
மீண்டும் இவர் தான் மாவட்ட செயலாளர் அடித்து ஆணித் தரமாக கழக உறுப்பினர்கள் கூறுவதை கேட்க முடிகிறது இந்த நிலையில் கழகத் தேர்தல் களத்தில் முந்துவது ஏபி நந்தகுமார் என்பதில் ஐயமில்லை.
