முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் சமையலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சௌமியா நாராயணபுரம் ஸ்ரீ முத்தையா மெமரியில் டிரஸ்ட் DDUGKY திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் சமையலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சியாக நடைபெற்றது சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் விஜய சங்கரி, அன்பு ராஜா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மணிமாறன் முருகன் மற்றும் பயிற்சி மையத்தின் முதல்வர் வெங்கடேசன் கலந்து கொண்டு பயிற்சியினை துவக்கி வைத்தார் இந்தப் பயிற்சியினை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கான அரசு பள்ளிகளில் பணி புரியும் சமையலர்கள் கலந்துகொண்டனர் இங்கு 13 வகையான காலை உணவு செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது இதில் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணி, பொன்முத்து, சரவணன், மாணிக்க நாச்சியார், கலந்துகொண்டு பயிற்சியினை வழங்கினார்

