முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் ஐந்தாவது நாள் சிறப்பு முகாம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம்.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சிறப்பு முகாம் மு.தூரி தேவர் நகரில் ஐந்தாவது நாளாக முதுகுளத்தூர் தீயணைப்பு துறைமூலம் தீ விபத்து தடுப்பு செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் அ.மருது பாண்டியன் தலைமையில் நடந்தது. அனைவரையும் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் என்.மங்களநாதன் வரவேற்றார்.
இம்முகாமில் முதுகுளத்தூர் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் திரு.வெங்கடேசன் கலந்து கொண்டு தீவிபத்து மற்றும் விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்தும், பாம்பு கடித்தால் செய்யப் படும் முன் தடுப்பு நடவடிக்கை குறித்தும், செயல் விளக்கம் மூலம் விளக்கி விழ்ப்புணர்வு எற்படுத்தினார்.
இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் திரு சிவக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக பள்ளி, சாலை, குளங்களில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி உழவாரப் பணியில் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபட்டனர்.