மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டினை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் நேற்று மாலை வீட்டினை இடிக்கும் பணியினை மேற்கொண்டனர். இதில் நெற்குன்றம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரும் வீடு இடிக்கும் பணியினை மேற்கொண்டார்.
அப்போது வீட்டின் மைய பகுதியில் உள்ள சுவரை இடித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த சுவர் முழுவதும் சரிந்து விழுந்துள்ளது இதில் அருகே இருந்த சேகர் மீது சுவர் விழுந்துள்ளது.
இதனைக் கண்ட கட்டிட தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த சேகரை மீட்டு 108 உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சேகர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் அறிந்த சுங்குவார்சத்திரம் போலிசார் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கட்டிட விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவர் இடிக்க வந்தவர் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் மொளச்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.