BREAKING NEWS

வடக்குசந்தனூர், ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வடக்குசந்தனூர், ஸ்ரீ திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வடக்குசந்தனூர் கிராமத்தில் கம்மாயில் எழுந்தருளிய அருள்பலித்து வரும் ஸ்ரீ அழகிய திருவேட்டை அய்யனார் ஸ்ரீ கருப்பணசாமி ஆலயம் புனுர்தாரண ஜீரணேர்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

 

இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் நகரப்புறங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், வடக்கு சந்தனூர் சாலை என். புக்குளி, குஞ்சுக்காரனேந்தல், டி,ஆலங்குளம், பெரியகண்ணனூர், மாங்குளம், வண்ணான்குளம், தெற்கு சந்தனூர், மற்றும் குலதெய்வ வழிபடும் குடிமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாகவும் கும்ப கவசத்தில் நீராடியும் ஆராதனையும் கிராமங்களில் இருந்து

 

 இளைஞர்களும், பெரியவர்களும், ஏராளமானோர் நேர்த்திக்கடன் கள் பூ முடி எடுத்தல், மொட்டை எடுத்தல் மாவிளக்கு பூஜை, விளக்கு பூஜை நேத்தி கடன்களை கிராம பொதுமக்களும் இளைஞர்களும் கோவில் நிர்வாகிகளும் கிராம கமிட்டிகளும் கோயில் விசேஷங்களில் பங்கேற்று வெகு சிறப்பாக நடத்தி முடித்தனர் பிறகு அங்கு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பூஜைகளும் வெகு சிறப்பாக அனைத்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் ஸ்ரீ திருவேட்டை அய்யனார் சுவாமியின் தரிசனத்தோடு நடைபெற்றது. 

 

இக்கோயிலின் நிர்வாகத்தின் முன்னிலையில் இரவு வள்ளி திருமணம் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )