BREAKING NEWS

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் இன்றி பொதுமக்கள் தவிப்பு!   

வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர் இன்றி பொதுமக்கள் தவிப்பு!    

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறனந்தாங்கல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிராம உதவியாளர் இல்லாமல் செயல்படுகிறது

பொதுமக்கள் எதற்கெடுத்தாலும் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனையே நேரில் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது அவர்களது துரதிஷ்டம் என்று கூறி ஆதங்கப்படுகின்றனர்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி கிராம உதவியாளர் இல்லாமல் போனதற்கு அடிப்படை காரணமே தற்போதுள்ள கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவனுக்கு முன்பிருந்த கிராம நிர்வாக அலுவலர் நிவேதா குமாரியுடைய அடாவடிப்போக்கும், தெனாவெட்டும்,

தாசில்தாரை தனது பிடியில் வைத்திருக்கும் நிலைமையாலும் இந்த துர்பாக்கிய நிலை வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிலவி வருவததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கடமை இங்கு அனைவருக்கும் உண்டு.

ஒரு கிராம நிர்வாக அலுவலர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஏதோ வன்முறையாளர்களும், தீவிரவாதிகளும், நாட்டிற்கு தேவை இல்லை என்று ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் யாரும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் நிவேதா குமாரி செயல்பட்டார்.

இதற்கு காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் அவருக்கு ஒத்து ஊதினார் என்பதே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இடமாற்றம் காரணமாக வண்டறந்தாங்கல் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள சேவூர் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலராக (நிவேதாகுமாரி)பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்குப் பிறகு வந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் சேர்க்காட்டில் இருந்து வண்டறந்தாங்களக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது பணிபுரிந்து வருகிறார் இவரும் தற்போது கிராம உதவியாளர் இல்லாமல் சொல்லொனா துயரத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபுறம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் கிராம நிர்வாக அலுவலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். கிராம உதவியாளர் இன்றி செயல்படும் அலுவலகம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே கிராம உதவியாளராக பணியாற்றிய லோகநாதன் அருகில் உள்ள அரசமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார் நிவேதா குமாரை சொன்னார் என்ற ஒரே வார்த்தைக்காக அவரது பேச்சை வேதவாக்காக எண்ணிய வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் எந்தவித கேள்வியும் கேட்காமலும் விசாரணை நடத்தாமலும் லோகநாதன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இவரை யார் யார் அனுசரித்த போகாமல் உள்ளார்களோ அவர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் வட்டத்துக்கு வட்டம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறார் இந்த வட்டாட்சியர் ஜெகதீஸ்வரர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை .

இவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் குறிப்பாக இவர்களுக்கு ஜால்ரா தடுப்பவர்களை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மற்றவர்களை தூக்கி அடிப்பதில் இவர் வல்லவர் என்றும் கூறப்படுகிறது குறிப்பாக வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆனால் இதனை மாவட்ட ஆட்சியர் செய்யாமல் அமைதி காத்து வருகிறார் அது ஏனோ என்பது சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர்களும் பணியிட மாற்றத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் ஆனால் காட்பாடியில் உள்ள ஜெகதீஸ்வரனுக்கு மட்டும் பணியிட மாற்றம் வழங்கப்படாமல் தொடர்ந்து அவரே வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கு அடிப்படை காரணம் என்னவென்று தெரியவில்லை வருவாய்த்துறை இல்லையே காட்பாடிக்கு ஒரு வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனே தவிர வேறு யாரும் இல்லை என்றது போன்ற ஒரு மாயையை வருவாய்த்துறையில் ஏற்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில் ஒன்றும் தாங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒரு கிராம உதவியாளரை நிரந்தரமாக நியமனம் செய்து அவரை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கிராம பொதுமக்களும் ஒரு சேர கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வன்றந்தாங்கலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இதே காட்பாடி வட்டத்தில் பண்ணையில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு பணியாற்றி வருகிறார் இவருக்கு மூன்று கிராம உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் குருஷேத் சாந்தி குணா ஆகிய மூவர் கிராம உதவியாளர்களாக இங்கு சுற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஒரே அலுவலகத்திற்கு மூன்று கிராம உதவியாளர்கள் ஆனால் இங்கு கிராம உதவியாளரை இல்லை இது எப்படி உள்ளது? ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற ரீதியில் ஜெகதீஸ்வரன் செயல்படுவதற்கு இந்த உதாரணம் மட்டுமே தற்போது போதும் என்று நினைக்கிறோம்

விரைவில் இது தொடர்பாக வருவாய்த்துறையில் நடக்கும் குறிப்பாக காட்பாடி வட்டத்தில் ராம நிர்வாக அலுவலர்களை தேவையின்றி பந்தாடும் ஜெகதீஸ்வரன் காழ்ப்புணர்ச்சி மற்றும் இவருக்கு ஜால்ரா படுபவர்களுக்கு பெரிய கிராமங்களை வழங்குவது இவரை கண்டுகொள்ளாதவர்களுக்கு ஏதாவது ஒரு கிராமங்களை வழங்குவது குறிப்பாக இவருடன் இணக்கமாக உள்ள பெண் விஎஓக்களுக்கு அருகருகிலேயே பணியிட மாற்றம் செய்து கொடுப்பது என்று ஜெகதீஸ்வரன் தில்லாலங்கடி ஆட்டம் ஓட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜெகதீஸ்வரனுக்கு மணி கட்டுவது யார் என்ற ரீதியில் காலம் சென்று கொண்டுள்ளது விரைவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஜெகதீஸ்வரன் மீது சாட்டையை சுவற்று வாரா அல்லது வருவாய்த்துறை அமைச்சர் காட்பாடி வட்டத்தில் தனிக் கவனமெடுத்து ஏன் இந்த வருவாய் வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்யாமல் தொடர்ந்து இவரே பணியில் நீடிக்க அனுமதி தருகின்றனர்.

என்பதையும் பார்த்து சீர்தூக்கி பார்த்து பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சில கிராம நிர்வாக அலுவலர்களும் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டத்தில் நடைபெறும் அட்டூழியங்கள் போல் வேறு எந்த வட்டத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இதே ஒன்றரை நாங்கள் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி சோகாவிட்ட பிரச்சனையில் கண்டும் காணாமல் விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் ஜெகதீஸ்வரன் போன்றவர்கள் மீது எதனால் வரை ஒரு விசாரணையும் நடைபெறவில்லை

மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு சாதகமாக வருவாய்த்துறை செயல்படுவது பண பரிமாற்றம் நடந்திருப்பது போல் சிதம்பர ரகசியமாக உள்ளது. என‌அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த ரகசியங்கள் என்றைக்கு வெளியில் வருகிறதோ அன்றுதான் இந்த காட்பாடி வட்டத்திற்கு விடிவு பிறக்கும் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த நடுநிலையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிகழ்வு தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் பரவலாக பேசப்படுகிறது மற்றும் செய்திகள்  பலமுறை வெளிவந்துள்ளது  இருப்பினும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் விசாரணை வலையதுக்குள் கொண்டு வருமா மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு  விசாரித்து இதற்கு  தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்

CATEGORIES
TAGS