BREAKING NEWS

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் – கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் 12,13,26,2 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெற உள்ளது.

 

இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

 

ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள கிளைச் செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் அவர்களுக்கான பணியை சிறப்பு மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகிகள் இடம் அறிவுறுத்தினார். பின்னர் அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பு நிர்வாகிகளிடம் வரைவு வாக்காளர் பட்டியலை வழங்கினார்.

 

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், பெருமாள், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யா துரை பாண்டியன்,அன்புராஜ்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,

 

 

மாவட்ட அம்மா பேரை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீலகண்டன், நகர பொருளாளர் ஆரோக்கியராஜ்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,

 

நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,கழுகுமலை நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி,வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,

 

 

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், மகேஷ் பாலா, பழனிகுமார், பழனி முருகன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )