வாசுதேவன் லே அவுட்- “சமத் நகரில் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் சட்டவிரோத ஆக்கிரமிப்பும்-ஏப்பம் விடும் திமுக பிரமுகர்களும்

வேலூர் மாநகராடசி வார்டு எண் 17 மற்றும் 33 க்குட்பட்ட பெங்களுர் சாலையினை ஒட்டியுள்ள வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் உள்ளது. ஆதில் சமத் நகரில் வசிக்கும் திமுக பிரமுகர் சேண்பாக்கம் அறங்காவலர்; குழ உறுப்பினரான தனகோட்டி வார்டு எண் 33 கவுன்சிலரான காசு சண்மூகம் ஆகிய இருவரும் வார்டில் எநத் மனைகள் கேட்பாரற்று உள்ளதோ அந்த மனைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து விடுவது வாடிக்கையாகும்
இதுகுறித்து வேலூர் நகரின் வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் பகுதி தற்போது சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியற்ற ஹவுஸ் சைட் விற்பனை காரணமாக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. பொதுமக்கள் கூறுவதற்கு, கடந்த மாதங்களாக இப்பகுதியில் பேரிடராய் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானம் நடைபெற்று பின்னர் அவை சூழ்ச்சியான முறையில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த ஆவணங்கள் மூலம் மாநகராட்சி கவுன்சிலர் ஷண்முகம் டவுன் பிளானிங் பிரிவு அதிகாரி; இன்ஜினியரிங் பிரிவு அருள் கமிஷனர் லக்ஷ்மணன் மண்டல அலுவலர் ஜமதக்கனி ஆகியோர் கூட்டணி அமைத்து சட்ட விரோத கட்டிடங்களுக்கு விற்பனை செய்து அதில் கலெக்ஷன் பார்த்துவருகின்றனர்.
இது ஒரு சாதாரண சட்ட மீறல் அல்ல பலரின் சொத்து அக்கிரமணம் சொத்து மோசடி நகரமைப்பு விதி மீறல் பொதுச் சொத்து ஆக்கிரமிப்பு அதிகார துஷ்பிரயோகம் அனைத்தும் ஒன்றாக இணைந்த மிகப்பெரிய குற்றம் என பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியரிடமும் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என புலம்புகின்றனர்
ஆக்கிரமணங்களுக்கு துணை போன அலுவலர்கள் தனியார் சொத்துக்களில் அளவீடு செய்தது குறித்து காவல்துறையில் புகார்கள் நிலுவையில் உள்ளன
மேற்படி நகரில் சமத் நகர் பகுதியில் தொடரும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள்! சமத் நகரில் மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள இடங்களிலும் இதே பாணியில் மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது:
அனுமதியில்லா கட்டுமானம் – ஹவுஸ் சைட் விற்பனை – மாநகராட்சி அதிகாரிகள் மவுனம் ஏன் எனபொதுமக்கள் கேள்வியெழப்புகின்றனர்
சட்டவிரோத ஆக்கிரமிப்பும் ஊழலும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் மாவட்ட ஆட்சியர் இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா
