வாணியம்பாடி- பள்ளிப்பட்டு கூட்ரோட்டில்- அபி ஹெல்த் கேர் கிளினிக்- மாபெரும் திறப்பு விழா.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அடுத்த பள்ளிப்பட்டு கூட்ரோட்டில் புதியதாக அபி ஹெல்த் கேர் கிளினிக் Dr.R.அசோக் குமார். MBBS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திறப்பு விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார். MLA., அவர்கள், தொழிலதிபர் R.R.வாசு அவர்கள், வட்டார மருத்துவர் Dr.ச.பசுபதி. MD., கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
முன்னதாக ஜெயலட்சுமி ராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஜாப்ரபாத் வார்டு உறுப்பினர் திரு. ஜபியுல்லா, குமார், வெங்கடேசன் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு திறப்பு விழாவை சிறப்பித்தனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அபி ஹெல்த் கேர் கிளினிக்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாணியம்பாடி