BREAKING NEWS

வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!

வாலாஜாபேட்டை நகரத்தில் கல்லூரி மாணவ – மாணவிகள் வாட்டி வதைக்கும் சுடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் நடந்து சென்று போதைக்கு பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை காவல்துறை மற்றும் ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் போதை தடுப்பு மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

 

இந்த பேரணியை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 

 

மேலும் விழிப்புணர்வு பேரணியில் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் பெருதளவில் போதைக்கு பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் எனவும் போதை பொருள் என்பது ஒரு பாவம் செயலாகும் அதனை ஒழிப்பதற்கும், மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை கல்லூரி மாணவ மாணவிகள் வாட்டி வதைக்கும் வெயிலையும்,

 

 

பொருட்படுத்தாமல் கைகளில் போதைப் பழக்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மாவட்ட மருத்துவமனை அருகே நிறைவடைந்தது இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ – மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

 

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS