விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா, செங்கிப்பட்டி கீழத்தெருவில் அமைந்துள்ள ஆழகுழாய் பைப், மின்இணைப்பு, முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை மீட்டு தருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி சேர்ந்த பிச்சை என்பரின் மகன் வின்சென்ட் ராஜ். இவர் ஆழகுழாய் பைப், மின்இணைப்பு போன்ற பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தது மீட்டு தர வேண்டும் என்றும் சட்ட விரோதமாக வாங்கிய பட்டா பத்திரத்தை ரத்து செய்தல் வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
நத்தம் சர்வே எண் 462C/1 புதிய சர்வே எண் 530/13 ல் 0.01.76 ஏர்ஸ் அந்த இடத்தில் 1979-ல் இருந்து ஆழ்குழாய் அடி பைப்பும். பிறகு EB SC/No 7941IA என்ற மிண் இணைப்பில் மின்மோட்டார் பயன்படுத்தி கீழத்தெருவில் 120 அனைத்து தெரு சமூக மக்களும் குடிதண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம். தற்போது வின்சென்ட்ராஜா என்பவர் சட்டவிரோதமாக அந்த இடத்தை பட்டா வாங்கி, பத்திரமும் பதிவுசெய்து வைத்துள்ளார். இந்த ஆழ்குழாய் குடிநீர் பைப் 1979-ல் இருந்து தொடர்ந்து மக்கள் பயன்படுத்தி வந்ததை தனிநபர் வின்சென்ட்ராஜா ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அதேபோல் கிழத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அக்கிரமிப்பு செய்துள்ளார். நாங்கள் 120 வருடங்களாக குடும்பத்திற்கு மேலாக பல தலைமுறையாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மற்றும் கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறோம். எனவே அந்த இடத்தை நில அளவை சர்வீஸ் செய்து கோவில் பெயரில் பட்டா வழங்க ஆணை வணக்கம் வழங்கும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே சட்ட விரோதமாக வாங்கிய பட்டா பத்திரத்தை ரத்து செய்து அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடர்ந்து குடிநீர் பயன்படுத்தவும் அந்த இடத்தில் ஆழ்குழாய் மின்மோட்டார் மீண்டும் பொருத்தி மக்கள் பயன்பெற நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
