BREAKING NEWS

விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி – தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி – தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ,

 

 

2021 – 22 அழிந்து போன பயிர்களான மிளகாய் ,மக்காச்சோளம் பாசி பயிர் பருத்தி போன்ற அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கிட கோரியும் தரமற்ற உரங்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு பன்றிகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயம் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )