BREAKING NEWS

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் வீர முத்துவேல், 42; விஞ்ஞானி. இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். தாய் ரமணி, குடும்பத் தலைவி. இவர்கள் இருவரும் விழுப்புரத்தில் வசிக்கின்றனர்.

 

விழுப்புரத்தில் உள்ள வீர முத்துவேலின் தந்தை பழனிவேல் கூறியதாவது:

வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின் சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

 

அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘இஸ்ரோ’வில் பணிக்கு சேர்ந்தார்.

இடையே சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது திறமையால் உயர்ந்து, தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பழனிவேல் கூறினார்.

CATEGORIES
TAGS