BREAKING NEWS

விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர். 

விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு! விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்தனர். 

நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மைலாப்பூர் அணையிலிருந்து  ஆனைகுளம் மற்றும் அதன்கீழ் வீற்றிருந்தான்குளம், கருப்புகால்குளம், தங்கயம், ஐயப்பநேரிகுளம், கோனார்குளம் என 10 குளங்கள்  அதாவது சுமார் 750 ஏக்கர் அளவில் பாசன வசதி பெற்று வருகின்றன.

 தற்சமயம் மைலாப்பூர் அணைக்கட்டிலிருந்து வருகின்ற பிரதான கால்வாய் ஆனைகுளம் வரையில் ஆக்கிரமிப்புகள் மிகுந்தும், சீமை கருவேல மரங்கள், ஆமணக்கு செடிகள், அமலை செடிகள், கொடிகள் , புதர்கள் அனைத்தும் நீர்வரும் கால்வாயை ஆக்கிரமித்துள்ளன.

எனவே கால்வாயை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கான்கீரிட் கால்வாய் அமைத்து நீர்வரத்தை தடையின்றி ஆனைகுளம் மற்றும் அதன்கீழ் உள்ள 10 குளங்களுக்கும்  கிடைக்க தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என நேற்று 3-9-22 ஆனைகுளம் விவசாய நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

அதனை பெற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு துரித நடவடிக்கை மேற்கொண்டு  ஆனைகுளம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி  4-9-2022 இன்று விரைவாக தொடங்கியது.

 

 

துரித நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் குறை தீர்த்த சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு ஆனைகுளம் விவசாய நண்பர்கள் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )