BREAKING NEWS

வீரப்பன் அண்ணன் மாதையன் சிறையில் மரணம்: வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்!

வீரப்பன் அண்ணன் மாதையன் சிறையில் மரணம்:  வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்!

வீரப்பன் அண்ணன் மாதையன் சிறையில் மரணம்:
வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

வீரப்பன் அண்ணன் மாதையன் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசியாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நலம் மோசம் அடைந்து சிறையிலேயே உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது.

இருபது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நீண்டகால சிறைவாசிகள் குறித்து ஆய்வு செய்து அவர்களது முன்விடுதலை குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழ்நாடு அரசு, நீதியரசர் ஆதிநாதன் குழு அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் பெறப்பட்டு நீண்டகால வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை அடைய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதையனுக்கு ஏற்பட்ட கதி ஏனைய நீண்டகால சிறைவாசிகள் யாருக்கும் ஏற்பட விடக்கூடாது.

எனவே தமிழக அரசு, நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரம் உள்ளதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதைப் பயன்படுத்தி நீதியரசர் ஆதிநாதன் குழுவிடமிருந்து விரைவாக அறிக்கைப் பெற்று விடுதலை செய்வதற்கான வழிவகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )