வேப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ. கணேசன் அவர்களின் துணைவியார் பவானி அம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாய் அப்போலோ கல்வி நிறுவனம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.
இம்முகாமிற்கு சாய் அப்போலோ கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். தங்கதுரை தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பவானி அம்மாளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அப்போது திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி உடன் இருந்தார்.
இந்நிகழ்வில் மருத்துவர் ஜேசுதாஸ், மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம், நல்லூர் ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, இளைஞரணி துணை அமைப்பாளர் நகர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இம்முகாமில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.