வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!

சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில்
‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், வேலூர் கோட்டாட்சியர் செந்தில் குமார், மாவட்ட கல்வி அலுவலர், மண்டல குழு தலைவர் யூசுப்கான், ஊரிசு கல்லூரி முதல்வர் முனைவர் ஆனிகமலா ஃபிளாரன்ஸ் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள், பல்வேறு அரசு துறை அதிகாரிகள், திமுக தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.