வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பாலாற்றுபகுதியில் மாநகராட்சிதூய்மை பணியாளர்களுடன் என்சிசி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள். குப்பைகள். கட்டிடக்கழிவுகள் கழிவு நீர் போன்றவை பாலாற்றில் கலந்து சுகாதாரமற்றவையாக காணப்படுகின்றன.

இதை தூய்மை செய்யும் பணியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் காட்பாடி10 வது பட்டாலியன் சேர்ந்த என்சிசி மாணவர்கள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன் இணைந்து பாலாற்றில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள்.

கழிவுகள் போன்றவற்றை அகற்றி சுமார்500 மீட்டர் தூரத்திற்கு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
CATEGORIES வேலூர்
