BREAKING NEWS

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன்.

 

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

 

இப்பள்ளியில மேநீர் தேக்க தொட்டி அமைக்க கூடாது என்று பள்ளி மேலாண்மை குழுவும், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்து. இப்பள்ளியில் 67 மாணவர்கள். 8 வகுப்புகளில் 6 ஆசிரியர்களுடன் நடந்து வந்தன.

 

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் நலனை கருதி பழைய கட்டிடங்களை இடிக்க ஆணையிட்டத்தின் பேரில் 2 பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.  இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய கட்டிடம் அமைத்து தருமாறு அரசுக்கு வேளாண்மை குழுவும் பள்ளிக்கல்வி குழுவும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடத்திலேயே மேல் நீர் தேக்க தொட்டி கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதை எதிர்த்து கல்வி மேலாண்மை குழு. பெற்றோர் ஆசிரியர் கல்விக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கல்வி கூடம் அமைக்க ஆவன செய்யுமாறும். மேநீர் தேக்க தொட்டி அமைக்க தடை விதிக்குமாறு மனுவில்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )