வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக துறையின் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் புத்தகத் திருவிழா

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில், வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத் துறை சார்பில் 3வது மாபெரும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில், ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நூலக அலுவலர் பழனி, அரசு துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்