BREAKING NEWS

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

வீட்டுமனை வாங்குவதற்காக கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய தம்பதியர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அபலைப் பெண் புகார்!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரியைச் சேர்ந்த ஜெகஜீவன் ராம் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ரா. இவர் திமிரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மகன் சீனிவாசன் என்பவரது பெயருக்கு காட்பாடி வட்டம், ஏரந்தாங்கல் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நம்பர் 1/366 என்ற விலாசத்தில் வசிக்கும் சுப்ரமணி என்பவரின் மனைவி சரஸ்வதி பெயரில் இருந்த வீட்டு மனை இடம் காட்பாடி ஏரந்தாங்கல் கிராமத்தில் சர்வே எண் 335/1B, (26 16 SF )இடத்தை கிரையம் பெற ரூபாய் 2 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இதை சுப்பிரமணி பெற்றுக்கொண்டு அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவரும் சேர்ந்து வேறு ஒரு நபருக்கு அந்த வீட்டுமனையை விற்பனை செய்து விட்டனர் என்ற தகவல் கேட்டு சித்ரா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அத்துடன் தான் கொடுத்த பணத்தை பலமுறை சரஸ்வதி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணி ஆகியோரை நேரில் சந்தித்து பணத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி கேட்டு வந்தார் .இந்நிலையில் கடந்த 12 .11. 2024 அன்று ரூபாய் 70 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இதையடுத்து 10. 12. 2024 அன்று ரூபாய் 50,000 கொடுத்துள்ளார். ஆக மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர்.

மீதமுள்ள பணம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்பதற்கு சித்ரா மற்றும் அவரது மகன் சீனிவாசன் ஆகிய இருவரும் சுப்பிரமணி வீட்டிற்கு கடந்த 17. 2. 2025 திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சரஸ்வதி ஆகிய இருவரும் சேர்ந்து தாய் மற்றும் மகன் ஆகிய இருவரையும் தகாத அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி அவர்களை தாக்கியுள்ளனர்.

அத்துடன் இருவரும் சேர்ந்து நீங்கள் இருவரும் உயிரோடு இருக்கக் கூடாது என்று கூறி பெட்ரோல் கேனை கொண்டு வந்து தாய் மற்றும் மகன் மேல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதனால் பயந்து போன தாயும், மகனும் அலறி அடித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள திருவலம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் திருவலம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் தாங்கள் கொடுத்த புகாருக்கு மட்டும் சிஎஸ்ஆர் பதிவு செய்து மனு ரசீது மட்டும் 116/2025 மற்றும் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டனர்.

இந்நிலையில் தங்களை தாக்கி உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற சுப்பிரமணி மற்றும் சரஸ்வதி ஆகிய தம்பதியர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து தங்களுக்கு சேர வேண்டிய நீதி பணம் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க வேண்டுமாய் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்த பாதிக்கப்பட்ட பணத்தை இழந்த சித்ரா ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளர் பணியை தாய் மற்றும் மகன் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு சூழ்நிலை இல்லாததால் இவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் புகார் கொடுத்து தங்களுக்கு உரிய விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கணவனால் கைவிடப்பட்ட நிலையில் பரிதவித்து வரும் சித்ராவிற்கு நீதி கிடைக்குமா? அவர்கள் இழந்த பணத்தை சரஸ்வதி மற்றும் அவரது கணவர் சுப்ரமணி ஆகியோரிடம் இருந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மீட்டு தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS