BREAKING NEWS

வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

வேளாண் விற்பனை கூட புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மாணிக்கபங்கு ஊராட்சி ஆணக்கோயில் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை மற்றும் வேளாண் விரிவாக்கத்துறையின் சார்பில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

 

 

செம்பனார்கோவில் ஒன்றியத்தின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

 

இதில் ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம் அப்துல் மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், வேளாண்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS