வைகை அணையில் இருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு.

வைணையிலிருந்து திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் ஒருபோக பாசத்திற்காக தண்ணீரை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகப்பன் திறந்து வைத்தார்.
இன்று முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 1130 கன அடி திறக்கப்படுகிறது முதல் 45 நாட்களுக்கு 1130 கன அடி தண்ணீர் முழுமையாகவும் அதன் பிறகு 75 நாட்களுக்கு அணைகளின் தண்ணீர் ஈர்ப்பைப் பொறுத்து முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மதுரை சிவகங்கை மாவட்டங்களில் ஒரு லட்சத்து 52 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் தற்போது திறக்கப்பட்ட தண்ணீர் வழிய நிலையில் இருந்து பெரியார் கால்வாய் மற்றும் திருமங்கலம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிகள் தேனி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர்கள் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
