வ.உ.சி வாழ்க்கை வரலாறு நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்து – தமிழக அரசுக்கு இலக்கிய அமைப்புகள் பாராட்டு.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்து மாவட்டம் முழுக்க பள்ளி கல்லூரிகளில் வலம்வந்து சுதந்திர போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் வரலாறு விளக்கும் விதமாக அமைந்திருந்தது பாராட்டத்தக்கது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.வே. விஷ்ணு இ .ஆ .ப .அவர்கள் இந்த கண்காட்சி பேருந்தை தொடங்கி வைத்தார்கள்.இன்றுபேருந்தை பாரதியார் உலக பொது சேவை நிதிய பொதுச் செயலாளர். முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியன், வ.உ.சி இலக்கிய மாமன்ற துணைச் செயலாளர் கவிஞர் சு.முத்துசாமி, பொதுவெளி அமைப்பாளர் வழக்கறிஞர்.கே.ஏ.ஏ. கந்தசாமி, எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி கணேசன் ஆகியோர் வ.உ.சிக்கு மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தனர். நேற்று சேரன்மகாதேவியில் சேரன்மகாதேவி தமிழ் பேரவை பொருளாளர் முன்னாள் தலைமையாசிரியர் புலவர்.ச. பொன்னழகன், சமூக ஆர்வலர் கோபி ஆகியோர் கண்காட்சி பேருந்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினர்.

வ.உ.சி மணிமண்டப காப்பாளர் வன்னிய ராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறையை சார்ந்த பூதப்பாண்டி ஆகியோர் விளக்கம் அளித்தனர். வ.உ.சி யின் அரிய புகைப்படங்களும் வாழ்க்கை வரலாறும், மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. இந்த மாவட்ட மண்ணின் மைந்தர் வ.உ.சி.யின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த கண்காட்சி பேருந்து மாநிலம் முழுக்க சென்று வர ஏற்பாடு செய்த திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மற்றும் தமிழ்நாடு அரசுக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறைக்கும் பாரதியார் உலக பொதுச்சேவை நிதியத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
