ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் அமைந்துள்ள ஸ்ரீ அமராவதி இன்ஸ்டியூட் 15 வது ஆண்டு வரவேற்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் ஆறுமுகம், வன அலுவலர் மகேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜ், புளியங்குடி லைன்ஸ் கிளப் தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாளர் முனிஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர் கார்த்திக், சிக்கந்தர் நிவாஸ், ஸ்டெல்லா சௌமினா ராமச்சந்திரன், பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் சுமித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ அமராவதி கல்வி குழும்ப தாளாளர் பாலசுப்ரமணியன் சாந்தா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்.
டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சண்முகப்பிரியா, வெங்கடேஸ்வரன், கார்த்திகை தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஸ்ரீ அமராவதி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் லீலாவதி, ஸ்ரீ அமராவதி பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் முருக லட்சுமி ஆகியோர் நன்றி கூறினார். விழாவினை இந்திரஜித் தொகுத்து வழங்கினார்.