அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 133 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது சௌந்தர பாண்டியனார் நாடார் சமுதாயத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
நீதிக்கட்சியின் தலைவராக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உரிமைக்காக போராடியவர்.
மக்களிடத்தில் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை முதன் முதலில் தொடங்கியவர். சுயமரியாதை மாநாடுகளை தலைமை ஏற்று தனது சொந்த செலவில் நடத்தியவர்.
சுயமரியாதை கொள்கைகளை நாடெங்கும் விதைத்தவர். தமிழகத்திற்கு முதன் முதலில் டாக்டர் அம்பேத்காரை அழைத்து வந்த பெருமை சௌந்தர பாண்டியனாருக்கு உண்டு. இவருக்கு சென்னையில் பனங்கல்பார்க்கில் டிஎன்யூ நாகராஜன் தலைமையில் சௌந்தரபாண்யனாருக்கு முழு திருவுருவச்சிலை நிறுவப்பட்டது.
சென்னையில் சௌந்தர பாண்டியனார் அங்காடி தெரு என்று அழைக்கப்பட்ட சாலை தற்போது சுருக்கமாக பாண்டி பஜார் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பாண்டி பஜார் உள்ளே நுழையும் இடத்தில் காவல் நிலையம் இருக்கிறது. அந்த காவல் நிலையத்தில் இன்றளவும் சௌந்தர பாண்டியனார் அங்காடி காவல் நிலையம் என்று தான் இன்றளவும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவல் நிலையத்திற்கு முன்பு பாண்டி பஜாரை நோக்கி அம்புக்குறியிடப்பட்டு ஒரு பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெயர் பலகையில் தியாகராயசாலை என்று பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. பாண்டி பஜார் தொடக்கம் முதல் முடியும் வரை இருபுறங்களிலும் அம்புக்குறி இடப்பட்டு சௌந்தரபாண்டியனார் அங்காடி தெரு என்ற பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அகரக்கட்டு லூர்து நாடார் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன், தென்காசி மாவட்ட கல்வி குழு செயலாளர் முப்புடாதி, கடையநல்லூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன், சாம்பார்வடகரை கிளை தலைவர் மோகன் அஜய் மற்றும் பலர் கலந்து கொண்டு சௌந்தரபாண்டியனாருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
