BREAKING NEWS

அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.

அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை தாலுக்கா பகுதிகளில் அகில இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கலவை, வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல்புதுப்பாக்கம், சொரையூர், உள்ளிட்ட பகுதிகளில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் , மற்றும் உதவியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், ஒன்றிய அரசு பதவி விலக வலியுறுத்தியும் தெருமுனை பிரச்சாரத்தில் கோஷங்கள் எழுப்பினர்.இதில் இந்தியப் பிரச்சினை மார்க்சிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS