அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கை மலைராம் ரெஸ்டாரெண்டில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் S.ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா துவக்க உரையாற்றினார். சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி’ பொருளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட துணை தலைவர் அஜீதாகூர் குற்றவியல் விசாரணை பற்றி கருத்துரையாற்றினார். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் தோழர் முத்து அமுதநாதன் பேசினார். மாவட்டத் தலைவராக S.ராஜசேகரன், மாவட்ட செயலாளராக வெ. மதி, மாவட்ட பொருளாளராக சொர்ணம் மாவட்ட துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், மாவட்ட துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட குழு உறுப்பினர்களாக சகாயசுதாகர், காளைஈஸ்வரன், நிருபன் சக்ரவர்த்தி, சரவணன், ஜேம்ஸ் ராஜா, தீபா, துரைபாண்டி, பூர்ணிமா, சுசீலா, செந்தில்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் நிருபன் சக்ரவர்த்தி நன்றியுரையாற்றினார். மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1).வழக்கறிஞர்கள் சேம நல நிதியை 15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2), மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். 3). மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடிதண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். 4), உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றபட வேண்டும்.
