BREAKING NEWS

அஞ்சூர் ஊராட்சி 60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.

அஞ்சூர் ஊராட்சி  60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.

செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில் நியூ எஜிகேஷனல் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் அஞ்சூர் ஊராட்சியை சேர்ந்த பெண்களுக்கு ஆறுமாத காலம் தையல் பயிற்சி பயிற்றுவித்து அவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு தலா7ஆயிரம் ரூபாய் வீதம் 4லட்சத்து 20ஆயிரம் மதிப்பீட்டில் 60 பேருக்கு தையல்மிஷின் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பரத் பெற்றோர்கள் தங்களது பணிச்சுமைக்கு மத்தியில் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

 

இன்றைக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மதுபானம் மற்றும் கஞ்சா போன்ற போதை பழக்கங்களுக்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். பெற்றோர்கள்தான் அதை தடுத்து நிறுத்த வேண்டும். என அப்பகுதி மக்களுக்கு அறிவுறை வழங்கி 60 பெண்களுக்கு இலவச தையல் மிஷின் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 

மேலும் இந்நிகழ்வில் துணைத்தலைவர் நித்யானந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சேகர், அருண், உஷாராணி பத்மநாபன், உமாமகேஸ்வரி, இந்துசேது வரதராஜன், தேவகிமோகன், துளசி ஆறுமுகம், கோமதிசங்கர் உள்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )