அடிச்சு அடிச்சு கையே வலிக்குது”.. காவலர் குடும்பத்தின் வரதட்சணை கொடுமையால் உயிருக்கு போராடும் பெண்!

திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது.
இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் ஒரு மிரளவைக்கும் சம்பவம் காவலர் குடும்பத்தால் கொடூரமாக அரங்கேறி உள்ளது.
7 ஆண்டு ஆனபிறகும் வரதட்சணை கொடுமை..
தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரின் வரதட்சணை கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் பூபாலன், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். இதில் குற்றவாளிகளை எப்படி காவலர்கள் கொடுமையாக கையாளுவார்களோ, அதேபோல் தன் மனைவியை தான் சித்திரவதை செய்ததாகவும் அந்த கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியை, தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் நடந்த சித்திரவதையால், தற்போது மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார்.
மதுரையில் வரதட்சணை கொடுமை செய்த காவலர் குடும்பம்
கன்னியாகுமரி| 50 பவுன் நகை.. 50 லட்சம் வீடு.. மீண்டும் ஒரு வரதட்சணை கொடூரம்.. புதுப்பெண் உயிரிழப்பு!
உயிருக்கு போராடும் பெண்..
இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தலைமை காவலர் பூபாலன், இவரது தகப்பனார் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், காவலரின் தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் மீது நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் குடும்பத்தினர் தமக்கே வேண்டிய வரதட்சணைக்காக இளம்பெண்ணை சித்திரவதை செய்திருப்பது, சமூக நீதி மற்றும் சட்டத்தின் மீது மக்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது
மதுரையில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு பிறகும் ஆசிரியை ஒருவருக்கு காவலர் கணவரால் வரதட்சணை கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை அடித்து அடித்து கை வலிப்பதாக, தனது தங்கையிடம் பேசிய காவலரின் ஆடியோ வெளியாகியுள்ளது
இதனால் வரதட்சனை கொடுமை – போலீஸ் பூபாலன் ஆடியோ சர்ச்சையான நிலையில் பூபாலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் அதிரடி உத்தரவிட்டார்.
மேலும் பூபாலனின் தாய், தந்தை, சகோதரி மீதும் வழக்குப்பதிவு – 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.