அணைக்கட்டு மலைப்பகுதிகளில் 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்பி அதிரடி.

வேலூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து வேலூர் அடுத்த அணைக்கட்டு அருகே உள்ள மலைப்பகுதிகளான அல்லேறி, மாமரத்து கொல்லை, ஆகிய பகுதிகளில் சென்னை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர் T.செந்தில்குமார் தலைமையில்,..
வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் பேபி குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமையிலான போலீசார் மலைப்பகுதிகளில் நடத்திய சாராய வேட்டையில் காட்டுப்பகுதியில் நடுவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ள சாராய ஊரல்களை மற்றும் அடுப்பு பேரல்கள் ஆகியவைகளை கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்ச கூடாது அதனை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சினால் அதனை தடுக்க வேண்டும் மேலும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஏற்படுத்தினர்.