அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பு அமைக்கப்பட்ட சாலையைத் துண்டித்த மணல் கொள்ளையர்கள். பொதுமக்கள் அதிர்ச்சி.

செய்தியாளர் ம.ராஜா.
நிலக்கோட்டை,செப். 28-திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் மிகவும் பிரசித்தி பெற்று புராணங்களில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வீர ஆஞ்சநேயர் கோயில் அணைப்பட்டி அருகே செல்லும் வைகை ஆற்றுப் படுகையை ஒட்டியவாறு அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு தினந்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் சுமார் 17 அடி நீளமுள்ள சித்தர்கள் நத்தம் ,மல்லியம்பட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் சுமார் பல லட்சம் மதிப்பில் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த சாலையை இப்பகுதி பொதுமக்கள் மனதிற்கும் பல்வேறு பணிகளுக்கும் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சாலையின் இருபுறமும் துண்டித்து இரவு பகலாக மணல் அள்ளும் சமூக விரோதிகள் மணலை அள்ளி சென்றுவிட்டனர். இந்தச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் திடீரென துண்டிக்கப்பட்டு இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
எனவே பொதுமக்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
