அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று… அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்

அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அதிகம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்தில்
தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் இந்த நிலையத்தில், நாய்கள் பயங்கரமாக விரட்டுதல் மற்றும் கடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
ரேபிஸ் தொற்றால் உயிரிழப்புகள்: மக்கள் கோரிக்கை. ஏற்கனவே பலர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகி இருக்கின்ற நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி துறையிடம் கடும் எதிர்பார்ப்பு. தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், எதிர்காலத்தில் இன்னும் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, அஞ்சு கிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.