அதிக உயரதிலும் அதிவேகத்தில் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.04.2023 அன்று தொடங்கப்பட்டு எட்டு நாட்கள் விழா அனுசரிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள் மேலும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுவிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் ஜி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார்.
அதில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் அமைக்கப்படும் அதிக உயரதிலும் அதிவேகதுடன் சுற்றக்கூடிய ராட்டினங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,
மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் காவலர்களுக்கு அடிப்படை வசதிகளான நகரும் வாகன கழிப்பறைகள் அமைத்திட வேண்டும்.
மற்றும் குடிநீர் சமூக இடைவளி பக்தர்களின் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவைகளுக்கு முன்னேற்பாடுகள் செய்து அசாதாரண சூழலை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.